கோவை : மருத்துவமனைகளில் சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு எதிர்பாராத அசம்பாவிதம் நடந்தால் மருத்துவ சங்கத்தை பொதுமக்கள் அணுகலாம் எனவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

இடையர்பாளையம் அருகே இருக்கும் தனியார் மருத்துவமனை உரிய சிகிச்சை அளிக்காததால், விபத்தில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தினால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவமனையின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் மாரியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் அவர் கூறியதாவது :- மருத்துவமனையில் எதிர்பாராதவிதமாக நோயாளிகள் உயிரிழப்பு ஏற்பட்டால். பொதுமக்கள் மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் தாக்குகிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சையில் ஏதாவது தவறு ஏற்பட்டால் சட்டப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மருத்துவமனையை அச்சுறுத்தும் வகையில் இடர்பாடுகளை கொடுத்தால், தாக்குதல் நடத்தினால் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் 48/2008-இன் கீழ் ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சிகிச்சை வழங்காத மருத்துவர்கள் இறப்புச் சான்றிதழ்கள் வழங்க முடியாது. இது அரசு பணியாளர்கள் மூலம் மட்டுமே இறப்பு சான்றிதழ் பெற வேண்டும், இதற்கு சிகிச்சை வழங்காத மருத்துவர்கள் பொறுப்பல்ல, என தெரிவித்தார்.