சூலூர் இடைத்தேர்தல் : 22 வேட்பாளர்கள் போட்டி

கோவை: சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுக்கள் கடந்த 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

கோவை: சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுக்கள் கடந்த 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 

அதில், முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 48 வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 61 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில், தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி, அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி, அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன் உள்ளிட்ட 22 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 39 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

இந்த நிலையில், வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இறுதி நாளான இன்று, எந்த வேட்பாளரும் வாபஸ் பெறவில்லை. இதனால், 22 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதன்படி, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும், உழைப்பாளி மக்கள் கட்சி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் கட்சி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய 4 பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. சுயேட்சையாக போட்டியிடும் அ.ம.மு.க. உள்ளிட்ட 16 சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளனர். 

தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்களது சின்னத்தில் போட்டியிடுகின்றன. சுயேட்சையாக போட்டியிடும் அ.ம.மு.க.விற்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...