அருந்ததியின மக்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தவர் கலைஞர் : சூலூரில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி பிரச்சாரம்

கோவை : அருந்ததியின மக்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தவர் கலைஞர் கருணாநிதி என்று சூலூரில் அருந்ததி இன மக்கள் குடியிருப்பில் பிரச்சாரம் செய்த தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.

கோவை : அருந்ததியின மக்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தவர் கலைஞர் கருணாநிதி என்று சூலூரில் அருந்ததி இன மக்கள் குடியிருப்பில் பிரச்சாரம் செய்த தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.

சூலூர் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து தி.மு.க.வினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சூலூர் ஸ்லிப்பர் காலனியில் வசிக்கும் துப்புரவு தொழிலாளர்கள் மத்தியில் தி.மு.க.வின் கழக துணைப்பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி அருந்ததியின மக்களிடத்தில் சென்ற வாக்குகளை சேகரித்தார்.



அப்போது அவர் பேசியதாவது :- ஏழைகளின் கடனை தள்ளுபடி செய்தவர் கலைஞர். அனைத்து சலுகைகளும் பெற்று தந்தவர் கலைஞர். அருந்ததியினத்தின் இந்த மக்கள் வழக்கறிஞர்களாக, டாக்டர்களாக, பொறியாளர்களாக வர வேண்டும் என 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தவர் கலைஞர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கேபிள் கட்டணம் குறைக்கப்பட உள்ளது. 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடனை கட்ட வேண்டாம். கடனை கட்டப்போகின்ற சின்னம் உதய சூரியன். 10-வது படித்த 50 ஆயிரம் பெண்களுக்கு மக்கள் நல பணியாளர்கள் பணி வழங்க உள்ளார் தி.மு.க. தலைவர். 10-வது படித்த அருந்ததியின ஆண்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்கப்படும் என ஏராளமான திட்டங்களை தி.மு.க. தலைவர் அறிவித்துள்ளார்கள். கேட்காமலேயே இலவச அடுப்பு கேஸ் சிலிண்டர் வழங்கியவர் கலைஞர். 

இன்று ஒரு சிலிண்டரின் விலையை எடப்பாடியும், மோடியும் 1,300 ரூபாயாக உயர்த்தி விட்டனர். தி.மு.க. ஆட்சி வந்தவுடன் அதை பழைய விலைக்கே கொண்டு வரப்பட உள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் உங்களை தேடி வர வேண்டும். அதற்கு அருந்ததியின சமுதாய மக்கள் உதயசூரியனுக்கு வாக்களித்து, 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பொங்கலூர் பழனிச்சாமி ஜெயிக்க வேண்டும், என்று பேசினார்.



தொடர்ந்து கண்ணம்பாளையம் பேரூராட்சி, பீடம்பள்ளி பேரூராட்சி பகுதியில் உள்ள அருந்ததியின மக்களிடத்தில் வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து அருந்ததியின மக்களிடத்தில் நடந்து சென்று வாக்குகளை சேகரித்தார். இந்த பிரச்சாரத்தின்போது, சூலூர் நகர செயலாளர் ஜெகநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...