நீலகிரி : உதகையை அடுத்த மஞ்சகொம்பை கிராம பகுதியில் பன்றிக்கு வைத்த சுருக்கில் மாட்டி சிறுத்தை உயிரிழந்த சம்பவம் குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த மஞ்சகொம்பை மற்றும் அதனை ஒட்டியுள்ள வனப்பகுதிகளை ஒட்டிய கிராம புற பகுதிகளில் சிலர் சட்டத்திற்கு புறம்பாக, பசுந்தேயிலை, காய்கறி தோட்டங்களில் பன்றிகளை பிடிக்க சுருக்கு வைக்கின்றனர். இப்படி சுருக்கு வைக்கக் கூடாது என வனத்துறையினர் தொடர்ந்து எச்சரித்தும் சிலர் சுருக்கு வைக்கின்றனர். இந்த நிலையில், உதகை மஞ்சகொம்பை பகுதியில் இரவு நேரத்தில் வைத்த சுருக்கு கம்பியில் மாட்டிய சிறுத்தை விடுபட போரடி உயிரை விட்டது. இது தொடர்பாக வனத்துறையினர் ராஜேந்திரன் என்பவரை கைது செய்தனர்.