கோவை : சூலூரில் 35 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சூலூர் தேர்தல் பிரிவு காவல்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.
கோவை : சூலூரில் 35 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சூலூர் தேர்தல் பிரிவு காவல்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரிவு காவல்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா கோவை சூலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- சூலூரில் 35 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 9 பறக்கும் படைகள் மற்றும் 9 நிலையான கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சூலூரில் மொத்தம் 4,123 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 66 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது

இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணம் கொடுப்பதை தடுக்க பொதுமக்கள் தகவல் அளித்து காவல்துறைக்கு உதவ வேண்டும். 26 இருசக்கர வாகனம் மற்றும் 24 நான்கு சக்கர வாகனங்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர், என்றார்.
மேலும், காவல் அதிகாரிகள் மாற்றக்கோரியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அது துறை சார்ந்த ரகசியமான தகவல்கள். அது தொடர்பாக ஊடகத்தினரிடம் கருத்து கூற முடியாது. மாநிலம் முழுவதும் 4,724 தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.