பரளிக்காடு சூழல் சுற்றுலா வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் : கோவை மாவட்ட வனத்துறை அறிவிப்பு

கோவை : கோடைக்கால கொண்டாட்டமாக வனத்துறை நடத்தும் பரளிக்காடு சூழல் சுற்றுலா வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் என கோவை மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.

கோவை : கோடைக்கால கொண்டாட்டமாக வனத்துறை நடத்தும் பரளிக்காடு சூழல் சுற்றுலா வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் என கோவை மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து பில்லூர் அணை செல்லும் வழியில் உள்ள இயற்கை எழில் மிகுந்த பரளிக்காடு என்னுமிடத்தில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா நடைபெற்று வருகிறது. ஒரு நாள் இயற்கையோடு இணைந்து வாழ்வோம் என விரும்பி இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம். பில்லூர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் மணிக்கணக்கில் பரிசல் பயணம், இங்குள்ள பழங்குடியின மக்கள் சமைத்து தரும் சத்தான உணவு, வனத்தினுள் நடைப்பயணம், பவானியாற்றில் ஆனந்த குளியல் என காலை முதல் மாலை வரை நடைபெறும் இந்த சூழல் சுற்றுலாவில் பங்கேற்க விரும்பி பலரும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து காத்திருக்கின்றனர். 100 பேர் என்ற அடிப்படையில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு என இரு நாட்கள் மட்டுமே சூழல் சுற்றுலா நடைபெறும் என்பதால் பலரும் அனுமதி சீட்டு கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருந்தனர். 



குறிப்பாக, இந்த கோடைக்கால சீசனில் இங்கு வர விரும்புவோர் எண்ணிக்கை மிக அதிகம். இதனை கருத்தில் கொண்டு, இந்த மே மாதத்தில் மட்டும் வாரத்தில் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகள் தவிர மீதமுள்ள ஐந்து நாட்களும் சூழல் சுற்றுலா நடத்தப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. 

இது குறித்து காரமடை வனச்சரக அலுவலர் சரவணன் கூறும் போது, “ஒரு நாளேனும் நகர வாழ்வில் இருந்து விடுபட்டு அடர்ந்த பசுமை காட்டின் நடுவே இயற்கையோடு இணைந்து இருக்க விரும்புவோரின் மனதில் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இங்கு சுற்றுலா வருபவர்களுக்கு இயற்கையின் முக்கியத்துவத்தையும் அதனை காக்க வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கி கூறுகிறோம். இப்பகுதி பழங்குடியின மக்களோடு இணைந்தே இந்த சூழல் சுற்றுலாவை வனத்துறை நடத்தி வருகிறது என்பதோடு, இதில் கிடைக்கும் வருவாய் அவர்களின் நலனுக்காக மட்டுமே செலவிடப்பட்டு வருகிறது,” என்றார். வனத்துறையின் அறிவிப்பை அடுத்து பலரும் சூழல் சுற்றுலாவில் பங்கேற்க முன்பதிவு செய்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...