எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை கொடிசியா புத்தகத் திருவிழா அமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கொடிசியா புத்தகத் திருவிழா அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கமான கொடிசியா சார்பில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் ஆதரவுடன் வரும் ஜூலை 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் "கோவை புத்தகத் திருவிழா' நடத்தப்படுகிறது. புத்தகத் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் மூத்த படைப்பாளிகளுக்கு "வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான "வாழ்நாள் சாதனையாளர்' விருது எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் ரூ. 1 லட்சம் வழங்கப்பட இருக்கிறது.
மேலும், இந்த ஆண்டு முதல் இளம் இலக்கிய எழுத்தாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட உள்ளன. புனைவு, கட்டுரை, கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருது தலா ரூ. 25 ஆயிரம் ரொக்கம், விருதுச் சான்றிதழ் அடங்கியது. அதன்படி, புனைவு நூல்களுக்கான பிரிவில் "கற்றாழைப் பச்சை' நூலுக்காக குணா கந்தசாமிக்கும், அபுனைவு நூல்களுக்கான பிரிவில் "தமிழ் இலக்கிய வரலாறு நூலுக்காக ஞா.குருசாமிக்கும், கவிதை நூல்களுக்கான பிரிவில் "விரல்களில் வழியும் விரலற்றவனின் செங்குருதி' கவிதைத் தொகுப்புக்காக சோலை மாயவன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
புத்தகத் திருவிழாவின் தொடக்க தினமான ஜூலை 19 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் எழுத்தாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது.