நீலகிரி : பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தாததால், இனி ரேடியோ காலர் தேவையில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவதாகவும், குடியிருப்புகளுக்குள் புகுந்து அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் கூறி கோவை மாவட்டம் தடாகம் வனப்பகுதியில் இருந்து விநாயகன் என்ற காட்டு யானை கடந்த டிசம்பர் மாதம் பிடிக்கப்பட்டு, முதுமலையில் கொண்டு சென்று விடப்பட்டது. இந்த யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் விதமாக, அதன் கழுத்தில் ரேடியோ காலர் எனப்படும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது.
சுமார் 6 மாதங்களாக தமிழகம் - கர்நாடகா எல்லையில் உலவி வந்த விநாயகனின் நடமாட்டத்தை இந்தக் கருவியின் மூலம் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். அவ்வப்போது, கிராமங்களுக்குப் புகுந்து, விவசாயப் பயிர்களை சேதப்படுத்தியும் வந்தது. இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் விநாயகனை கண்காணிக்கும் பணியைக் கைவிட்டனர். அதற்கேற்றவாறே, விநாயகனும் எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தாமல் இருந்து வந்தான்.
கடந்த 12 நாட்களுக்கு முன்பு விநாயகனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த ரேடியோ காலர் கழன்று விழுந்துள்ளது. இதற்கு காரணம், விநாயகன் யானை உடல் எடை குறைந்ததுதான் என வனத்துறையினர் கூறுகின்றனர். இருப்பினும், வனத்துறையினர் குழு அமைத்து, விநாயகனின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தாததால், இனி ரேடியோ காலர் தேவையில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, சிம்ப்ளிசிட்டியிடம் முதுமலை வனக் காப்பக கள இயக்குநர் கே.கே. கவுசல் கூறுகையில், "கோவையில் முக்கியமான சம்பவம் என்பதால், விநாயகனின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. மேலும், இடையூறு ஏற்படுத்தும் விதமான குணத்தைப் பெற்றிருந்தால், அதனை தொடர்ந்து கண்காணிக்க இது தேவைப்பட்டது. ஆனால், இந்த சுற்றுச்சூழலுக்கு ஏற்ப விநாயகன் மாறி விட்டதால், இனி ரேடியோ காலர் தேவையில்லை," என்றார்