கோவை : குனியமுத்தூர் சவள குல வேளாளர் சமூக நலக் கூட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆர். சக்திவேல் தொழிலாளர்களிடையே தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொழிலாளர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் இயக்குனர் ஜெகதீசன், இணை இயக்குனர் வேணுகோபால், மாண்புமிகு மாவட்ட முதன்மை தொழிலாளர் நீதிபதி பிளோரா, மாண்புமிகு கூடுதல் நீதிபதி மனிமொழி, 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி மலர்வேலன்டினா, 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடர்ந்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர். சக்திவேல் பேசியதாவது :-
உழைக்கும் மக்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக கொண்டாடப்படும் இந்நன்நாளில் அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிசெய்யும் தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு முகாமில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். தொழிற்சாலைகள் மற்றும் இன்னும் பிற இடங்களின் பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பையும் நீதியையும் பெற்றுத்தரும் இடமாக நீதித்துறை விளங்கி வருகின்றது. மேலும், இவ்வாறு நடத்தப்படும் சட்ட விழிப்புணர்வு முகாம்களின் மூலம் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது, என்றார்.