நீலகிரி : உதகை ரயில் நிலையத்தில் நடைபெற்ற பாரம்பரிய புகைப்பட மற்றும் ஓவியக் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

ரயில் பயணிகள் இடையே உதகமண்டலத்தின் பாரம்பரிய பெருமைகள் மற்றும் நீலகிரி மலை ரயில் பற்றிய பல்வேறு தகவல்கள் தெரியப்படுத்தும் பொருட்டு, உதகை ரயில் நிலையத்தில் பாரம்பரிய புகைப்படங்கள் மற்றும் நீலகிரி மலை ரயில் ஓவியங்கள் வைக்கப்பட்ட கண்காட்சி இன்று நடைபெற்றது. அதில், நீலகிரி மலை ரயில் வரலாறு பற்றிய அரிய கருப்பு, வெள்ளை புகைப்படங்கள், நீலகிரி மலை பிரதேசங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறை பற்றிய புகைப்படங்கள் மற்றும் நீலகிரி மலை ரயில் பற்றிய ஓவியங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன.

புகழ் வாய்ந்த புகைப்படக் கலைஞர்கள் மதிமாறன் மற்றும் ஜோத்ஸ்னா பிரசாத் ஆகியோரின் புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.