இலங்கை குண்டுவெடிப்பிற்கும் மதுரை ஆட்சியருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறியவர் கைது : காவல்நிலையத்தில் ஆடைகளின்றி நிற்கும் காட்சிகளால் பரபரப்பு

மதுரை : இலங்கை குண்டுவெடிப்பிற்கும் மதுரை ஆட்சியருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறியவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர் காவல்நிலையத்தில் ஆடைகளின்றி நிற்கும் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை : இலங்கை குண்டுவெடிப்பிற்கும் மதுரை ஆட்சியருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறியவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர் காவல்நிலையத்தில் ஆடைகளின்றி நிற்கும் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சி.எம். சாமி என்பவர் தனது முகநூலில், இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பிற்கும், மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் தொடர்பு உள்ளது என தெரிவித்திருந்தார். மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தீவிரவாதிகளை இலங்கைக்கு அனுப்பி உள்ளார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். 

மாவட்ட ஆட்சியர் கோடிக்கணக்கான பணத்தை வாங்கிக் கொண்டு சமூக நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும், இதன் ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர் அடுத்தகட்டமாக தமிழகத்தை தீவிரவாதிகள் தாக்க உள்ளதாகவும், இந்த விவரம் தொடர்பான ஆவணங்களை நேர்மையான அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் முன்பு ஒப்படைப்பேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கறிஞர் சி.எம். சாமி மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று அவர் காவல்நிலையத்தில் ஆடைகளின்றி, கைகளில் வழக்கறிஞர் ஆடையை வைத்தபடி காவலர்களுடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே, போலீசார் சி.எம். சாமியின் நடவடிக்கைகள் குறித்தும், இவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா..? என்பது குறித்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...