கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி சூலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அருகம்பாளையம், ராசிபாளையம், கணியூர், தென்னம்பாளையம், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று அவர் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின்போது முன்னாள் அமைச்சர் நீலகிரி இராமசந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
இதனிடையே, சூலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நீலம்பூர், அரசூர் மற்றும் தென்னம் பாளையத்தில் தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை, சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து அப்பகுதியின் தேர்தல் பொறுப்பாளர்கள் மத்தியில் எ.வ.வேலு பேசியதாவது :- கடந்த தேர்தலில், சூலூர் வடக்கு பகுதியில் வாக்குகள் குறைவாக பெற்று பின் தங்கியுள்ளோம். இப்பகுதியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். பொதுவானவர்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். இந்தப் பகுதிகளில் 97 முதல் 98 சதவீதம் வரை அருந்ததியின மக்கள் உள்ளனர். கட்டாயம் அருந்ததியின மக்கள் இருக்கும் பகுதியில் பணியாற்ற வேண்டும்.
தீரன்சின்னமலை கொங்குவேளாள கவுண்டர் வம்சத்தைச் சேர்ந்தவர். இவருக்கு படை தளபதியாக இருந்தவர் பொல்லான். அருந்ததியினத்தை சேர்ந்த இவருக்கு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மணிமண்டபம் கட்டப்படும் என தி.மு.க. தலைவர் கூறியுள்ளார். இவற்றை அந்த மக்களிடத்தில் கூறி வாக்குகளை சேகரித்தால், அதிக வாக்குகள் பெறுவது நிச்சயம். காலை, மாலையில் உங்கள் விஜயம் அப்பகுதியில் இருக்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அருந்ததியின மக்கள் வசிக்கும் பகுதியில் சமுதாயக் கூடங்கள் கட்டப்படும் என்ற உத்தரவாதத்தைத் தர வேண்டும்.

இந்த ஆட்சியில் மத்திய அரசு மூலம் அனுப்பப்படும் எஸ்.சி., எஸ்.டி. நிதி பெரும்பாலும் பயன்படவில்லை. இந்த நிதிகளைப் பெற்று வீடுகள் கட்டித்தரப்படும் என்பதையும் அவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். வாக்குறுதியாக இல்லை, செய்து தருவோம் என்ற நம்பிக்கையுடன் கூறி வாக்குகளை சேகரியுங்கள், என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.எல்.ஏ. நா.கார்த்திக், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தேர்தல் பணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.