நீலகிரி : உலக புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடக்கவிருக்கும் 123-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு, மலர் மாடங்களில் மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.

சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் உலக புகழ்பெற்ற 123-வது மலர் கண்காட்சி வரும் 17-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடக்கிறது. இந்த மலர் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக, மலர் மாடங்களில் மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
இந்தாண்டு 200-க்கும் மேற்பட்ட ரகங்களில் மொத்தம் 15,000 மலர் தொட்டிகளில் ஓரியண்டல்லில்லி, ஏசியாடிக்லில்லி, இன்கோ மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பெகோனியா செம்பர் புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், க்ரைசாந்திமம், ஜினியா உள்ளிட்ட ரகங்கள் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு விருந்தாக அடுக்கி வைக்கப்படவுள்ளது. மேலும், இவ்வாண்டு மலர் கண்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக புது பூங்காவில் 20,000 பல வண்ண மலர் தொட்டிகள் வைக்கப்படவுள்ளது.

இதனிடையே, கோடை விழாவினை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது :- இந்தாண்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். பாதுகாப்பான பயணத்தை சுற்றுலாப் பயணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதால், வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். ஆங்காங்கே குப்பைகளை வீச வேண்டாம், என கோரிக்கை விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து, பூங்காவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சிகளை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.