முதுமலையில் யானை சவாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : ஆர்வம் காட்டும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி : முதுமலையில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக யானை சவாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், யானைகளில் சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி : முதுமலையில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக யானை சவாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், யானைகளில் சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதனால், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றிப் பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு குடும்பத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகள் வாகன சவாரி மற்றும் யானை சவாரி செய்து, இயற்கை எழில் காட்சிகள் மற்றும் வனவிலங்குகளைக் கண்டு ரசிக்கின்றனர்.

முதுமலையில் கும்கி யானைகள் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் சவாரி நடத்தப்படுகிறது. தற்போது, யானை சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முதுமலையில் ஆரம்பத்தில் 2 கும்கி யானைகள் மூலம் யானை சவாரி நடத்தப்பட்டு வந்தது. இதனால், யானை சவாரி செய்ய வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் கால தாமதத்தால் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. 

ஆனால், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்காக முதல் முறையாக 6 கும்கி யானைகள் மூலம் சவாரி நடத்த புலிகள் காப்பக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக, சங்கர், உதயன், விஜய், இந்தர், சுமங்கலா, பொம்மன் ஆகிய யானைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால், நாள் ஒன்றுக்கு 24 முறை யானை சவாரி நடத்தப்படுகிறது. கூடுதல் யானைகளைக் கொண்டு சவாரி நடத்தப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதுகுறித்து தெப்பக்காடு முன்பதிவு மைய வனச்சரகர் விஜய் கூறுகையில், "முதுமலையில் இதுவரை 2 யானைகள் மூலம் காலையில் 2 முறையும், மாலை 2 முறையும் என மொத்தம் 4 முறை சவாரி நடத்தப்பட்டு வந்தது. இதனால், யானை சவாரி செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் காலதாமதம் காரணமாக ஏமாற்றம் அடையும் நிலை இருந்தது. ஆனால், தற்போது 6 யானைகள் மூலம் சவாரி அனுப்புகிறோம். இதற்கு சுற்றுலாப் பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதற்காக ரூ. 1,120 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது, என்றார்.

 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...