சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் தி.மு.க., அ.ம.மு.க.,வின் நெருக்கம் வெளிப்பட்டுள்ளது : கோவையில் முதலமைச்சர் பேட்டி

கோவை : சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் தி.மு.க., அ.ம.மு.க. இடையேயான நெருக்கம் வெளிப்பட்டுள்ளதாகக் கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


கோவை : சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் தி.மு.க., அ.ம.மு.க. இடையேயான நெருக்கம் வெளிப்பட்டுள்ளதாகக் கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வந்தார். அப்போது, கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் பேசியதாவது :- இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் சிறப்பான வெற்றி பெறுவோம். தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 தொகுதி தேர்தல்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மேலும், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உளவுத்துறை இருப்பதால், தேர்தல் முடிவுகள் தொடர்பாக அறிக்கை வரவில்லை. 

சபாநாயகர் மீது எந்த அடிப்படையில் தி.மு.க.வினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர் என தெரியவில்லை. 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் தொடர்பில்லை. சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் மூலம் தி.மு.க., அ.ம.மு.க. இடையேயான நெருக்கம் வெளிவந்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுப்பதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொந்தளிப்பது ஏன்...?.

தேர்தலுக்கு முன்பாகவே ஆலோசனை நடத்தப்பட்டு குடிநீர் பிரச்சனை எங்கும் ஏற்படக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...