கழிவு பஞ்சுகளின் விலை உயர்வைக் கண்டித்து இன்று முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் : ஓஸ்மா அறிவிப்பு

கழிவு பஞ்சுகளின் விலை உயர்வு, பேக்கிங் சார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைக் கண்டித்து இன்று முதல் மே 5-ம் தேதி வரை தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஓஸ்மா அறிவித்துள்ளது.


கழிவு பஞ்சுகளின் விலை உயர்வு, பேக்கிங் சார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைக் கண்டித்து இன்று முதல் மே 5-ம் தேதி வரை தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஓஸ்மா அறிவித்துள்ளது. 

ஓப்பன் ஏண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் கூட்டமைப்பு (ஓஸ்மா) பொதுச்செயலாளர் அருள்மொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது :- ஓஸ்மா கூட்டமைப்பு சார்பாக இன்று முதல் 5-ம் தேதி வரை நூல்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதில், 180 மில்கள் பங்கேற்க இருக்கின்றன. இதனால், நாள் ஒன்றுக்கு 10 லட்சம் கிலோ நூல்கள் (கிரே யான்) உற்பத்தி இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதன்மூலம், ரூ. 14 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மூலப்பொருளான காட்டன் வேஸ்ட் அதாவது, கோம்பர் என சொல்லக்கூடிய கழிவு பஞ்சுகளின் விலை உயர்வு காரணமாக கடும் நெருக்கடியில் ஓஸ்மா தவித்து வருகிறது. இதனால், இந்தப் போராட்டம் அறிவிக்கப்படுகிறது. ஓஸ்மா கூட்டமைப்பு மில்ஸ் மூலம் உற்பத்தி ஆகும் நூல்கள் பல்லடம், சோமனூர், ஈரோடு பகுதிகளில் 3 லட்சம் கிலோ நாள் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நூல்களை ஏழை மக்கள் பயன்படுத்தும் பெட்சீட்டுகள், தூண்டுகள் போன்றவை தயாரிக்கப் பெரிதும் பயன்படுகிறது.

ரூ. 135 வார்பு நூல்கள் ரூ. 145-க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கழிவு பஞ்சுகளின் விலை ரூ. 24 ஏற்றம் அடைந்துள்ளது. ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், ஒரு சதவீத வரி தமிழகத்தில் மட்டுமே உள்ளது. இரண்டு ஆண்டுகளாகப் போராடியும் அரசிடம் கோரிக்கை வைத்தும் எந்த முடிவும் வரவில்லை. கழிவு பஞ்சுகளுக்கு பேக்கிங் சார்ஜ் தமிழகத்தில் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால், ரூ. 2.50 பைசா அதிகம் ஆகிறது. இதனால், கிலோவிற்கு ரூ. 5 என நஷ்டத்தில் நூல்களை விற்பனை செய்து வருகிறோம். இதனை முடிவுக்குக் கொண்டுவர ஸ்பின்னிங் மில்ஸ் மூலம் எங்களுக்கு வழங்கப்படும் மூலப் பொருட்களான கழிவு பஞ்சுகளை குறைந்த விலையில் விற்க வேண்டும். பேக்கிங் சார்ஜ் போடக்கூடாது, இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...