நீலகிரி : உதகை மத்திய பேருந்து நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் மிகவும் தாமதமாக நடப்பதால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

உதகை மத்திய பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்றும் திட்டத்தை கடந்த 2 ஆண்டுக்கு முன் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மலர் கண்காட்சியை துவக்கி வைத்த போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதற்காக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, உதகையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியது.
ஆனால், பணிகள் தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், இரவு நேரங்களில் போதிய மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் முதியவர்கள், தங்களது பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் ஏறுவதற்கு முடியாமல் இருளில் தவித்து வருகின்றனர். மேலும், தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் தவிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து கழகமும் உடனடி நடவடிக்கை எடுத்து பணிகளை துரிதவேகத்தில் செய்து முடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.