கோவை : தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜவுளி தொழிலை பாதுகாக்கக் குழு அமைக்கப்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு கூறினார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் பேரூராட்சி தலைவர் நித்யா மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பளருமான எ.வ.வேலு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது :- கோவை தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று பெருமைபட்ட காலங்களை எண்ணிப் பார்த்தேன். இன்று குறிப்பாக ஜவுளித்தொழில் நசுங்கி உள்ளதை அறிய முடிகின்றது. ஒரு தொழிலை நசிவடையாமல் பார்த்துக்கொள்வது அரசின் கடமை. 10 ஆயிரம் பேருக்கு வேலை தருவதாக கூறும் நிறுவனங்களுக்கு, அரசு சார்பில் சில சலுகைகள் வழங்கப்படும். இப்படித்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்தது. ஆனால், எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு அளித்தார்கள் என்பது பார்க்க வேண்டும். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, தமிழகத்தை சேர்ந்தவர்கள், எவ்வளவு பேர் அங்கு பணிபுரிகின்றார்கள் என்பதை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்திரவிட்டார். தொடர்ந்து, அடுத்து வரும் நிறுவனங்களுக்கு, எவ்வளவு பணியாளர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை போட்டார்.

ஜி.எஸ்.டி. வந்ததால் நடைமுறை சிக்கல் ஏற்பட்டு தொழில்கள் நசிவடைந்து பொருளாதாரத்தில் தாழ்வு பெற்றுள்ளோம். 33 வருவாய் மாவட்டங்களில் ஒப்பிட்டு பார்க்கையில், சோமனூரில் தான் அதிகளவிலான விசைத்தறிகள் உள்ளது. இவர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சி அமையாததற்கு இந்த மேற்கு மண்டலம் காரணமாக அமைந்து விட்டது. எனவே, இங்கு எங்கள் சட்டமன்ற உறுப்பினரை வெற்றிபெற வைத்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும். இந்த பிரச்சினைகளை எங்களால் தீர்வு காணப்படும்.
தி.மு.க. தலைவர் சுற்றுப்பயணத்தின்போது, அதன் வாக்குறுதிகளை அளிப்பார். 500 யூனிட் இலவச மின்சாரத்தை கலைஞர் வழங்கினார். வீம்புக்கு அம்மையார் 750 யூனிட் மின்சாரம் வழங்கி விட்டு, அட்டவணையை (டேரிப்) மாற்றினார். இதனால், அனைவருக்கும் பயனில்லாமல் போய் விட்டது. மின் வாரியத்தில் 2 லட்சம் கோடி கடன், அரசின் கடன் 3 லட்சம் கோடி கடன் உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் யூனிட் இலவசமாக வழங்கலாம். அந்த டேரிப்பை மாற்ற ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அந்த குழு, இந்த தொழிலை எந்தெந்த வகையில் காப்பாற்ற முடியும் என அரசிடம் கருத்து சொல்ல வேண்டும். பஞ்சு பதுக்கலை தடுக்க, பஞ்சு தொழிலில் ஈடுபட குறிப்பிட்ட அளவே ஸ்டாக் வைத்துக்கொள்ளலாம் என ஒரு புதிய சட்டத்தை கொண்டு வரலாம். சிறந்த ஆட்சி நடத்த முடியாமைக்கு, இந்த ஆட்சியாளர்களுக்கு திறமையின்மையாக இருக்கலாம். இப்போது ஒரு மோசமான ஆட்சி நடைபெறுகின்றது, என்று பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் கழக கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா, எம்.எல்.ஏ.க்கள் நா.கார்த்திக், முருகன், ஒய்.பிரகாஷ், தொழிலதிபர்கள் சக்திவேல் பழனிச்சாமி, கங்கா மூர்த்தி, நித்யா மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.