பொள்ளாச்சியில் கர்ப்பிணிப்பெண் பலியான சம்பவம் : தேடப்பட்டு வந்த போலி மருத்துவர் கைது

கோவை : பொள்ளாச்சி அருகே கருக்கலைப்பு சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலி ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.


கோவை : பொள்ளாச்சி அருகே கருக்கலைப்பு சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலி ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் நெகமத்தை அடுத்த மெட்டு வாவி அரிஜன காலனியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி வனிதாமணியின் (37) கர்ப்பத்தைக் கலைப்பதற்காக வடசித்தூரில் உள்ள ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சிமியின் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது, வனிதாமணிக்கு அவர் கருக்கலைப்பு ஊசி போட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வனிதாமணியின் உடல்நிலை மோசமாகி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, வனிதாமணியின் மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முத்துலட்சுமி போலி மருத்துவர் என்பது தெரியவந்தது. 

பின்னர், கோவை மாவட்ட ஆட்சியர் கு. இராசமணியின் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் பானுமதி தலைமையிலான அதிகாரிகள் கிருஷ்ணா, தனம் ஆகிய குழுவினர், முத்துலட்சுமியின் மருத்துவமனையில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முத்துலட்சுமியின் மருத்துவ சான்றிதழ்களை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, முத்துலட்சுமியின் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதனிடையே, தலாறைவாக இருந்த போலி மருத்துவர் முத்துலட்சுமியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்த நிலையில், போலீசார் முத்துலட்சுமியை நாகப்பட்டினம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...