கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19 ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுக்கள் கடந்த 22 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்றது. அதில் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சல வேட்பாளர்கள் என 48 வேட்பாளர்கள் மொத்தம் 61 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலணை தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி, அதிமுக வேட்பாளர் கந்தசாமி, அமமுக வேட்பாளர் சுகுமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன் உள்ளிட்ட 22 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 39 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து 22 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது வேட்பாளர் பட்டியல் அதன்படி திமுக, அதிமுக ஆகிய 2 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும், உழைப்பாளி மக்கள் கட்சி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் கட்சி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய 4 பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. சுயேட்சையாக போட்டியிடும் அமமுக, சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட 16 சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளனர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் அதிமுக சார்பில் கந்தசாமியும், திமுக சார்பில் பொங்கலூர் பழனிசாமியும் போட்டியிடுகின்றனர். பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் உழைப்பாளி மக்கள் கட்சி சார்பில் சண்முகம், ஊழல் எதிர்ப்பு இயக்க கட்சி சார்பில் சந்தோஷ்குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் விஜயராகவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சுயேட்சை பட்டியலில் அமமுக வேட்பாளர் சுகுமார், அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த பிரபாகரன், சமூக நீதிக்கட்சி வேட்பாளர் கணேசன், கள் இயக்கத்தை சேர்ந்த கதிரேசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதேபோல ஈஸ்வர மூர்த்தி, உமர் அலி, பி.என்.கந்தசாமி, பி.கந்தசாமி, கார்த்திகேயன், தேர்தல் மன்னன் நூர்முகமது, கே.பழனிசாமி, பாலமுருகன், புஷ்பனாந்தம், முருகன், ரமேஷ்குமார், ராஜா வேலுசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் ஒரே பெயர் வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர் கந்தசாமி பெயரில் மேலும் 2 சுயேட்சைகள் போட்டியிடுவதால், 3 கந்தசாமிகள் வேட்பாளர் பட்டியலில் உள்ளனர். இதேபோல திமுக வேட்பாளர் பழனிசாமி பெயரில் மேலும் ஒரு சுயேட்சை போட்டியிடுவதால் இரண்டு பழனிசாமிகள் உள்ளனர். வேட்பு மனுக்கள் வாபஸ் பெற மே 2 ம் தேதி கடைசி நாளாகும். இதைதொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.