வரும் ஜுன் மாதம் கோவையில் வெண்பன்றி வளர்ப்பு குறித்த 2 நாள் கருத்தரங்கு

கோவை : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் சார்பாக கோவையில் வரும் ஜூன் மாதம் 11 மற்றும் 12-ம் தேதிகளில் வெண்பன்றி வளர்ப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற உள்ளது.

கோவை : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் சார்பாக கோவையில் வரும் ஜூன் மாதம் 11 மற்றும் 12-ம் தேதிகளில் வெண்பன்றி வளர்ப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- பண்ணையாளர்கள் பயன்பெறும் வகையில், தமிழகத்தில் வெண்பன்றி வளர்ப்பில் தற்போதைய நிலை, சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு, கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இப்பயிற்சியில் வெண்பன்றி இனங்கள், கொட்டகை அமைப்பு, தீவன மேலாண்மை மற்றும் தீவன செலவைக் குறைக்கும் வழிமுறைகள், பன்றிகளைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள், விற்பனை உத்திகள், பன்றி இறைச்சிப் பொருட்கள் தயாரிப்பு, பன்றி இறைச்சி ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், பண்ணைப் பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் பல்கலைக் கழக பேராசிரியர்கள், பன்றி வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த தொழில் முனைவோர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்குக் கையேடு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 

பயிற்சிக் கட்டணம் ரூ. 590 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பன்றி வளர்ப்பில் ஆர்வம் உள்ள பண்ணையாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் மே 31-ம் தேதிக்கு முன்னதாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு நேரிலோ, கடிதம் மூலமாகவோ, மின்னஞ்சல்: [email protected] அல்லது தொலைபேசி எண். 94435 15328 குறுஞ்செய்தி (SMS), வாட்ஸ்-அப் மூலம் (முனைவர். வீ ரமேஷ், பேராசிரியர்) தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கரூரில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...