சூலூர் சூடுபிடித்தது அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் : தி.மு.க. விவசாய அணியினர் தீவிர வாக்குசேகரிப்பு

கோவை : சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து, விவசாயிகளுக்காக அறிவித்துள்ள திட்டங்களைக் கூறி தி.மு.க. விவசாய அணியினர் இன்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

கோவை : சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து, விவசாயிகளுக்காக அறிவித்துள்ள திட்டங்களைக் கூறி தி.மு.க. விவசாய அணியினர் இன்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.



சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக தி.மு.க.வைச் சேர்ந்த பொங்கலூர் பழனிச்சாமி போட்டியிடுகின்றார். இவரது தேர்தல் அறிக்கையில், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகளை விவசாயிகளின் மத்தியில் எடுத்து செல்லும் விதமாக, தி.மு.க. விவசாய அணியினர் சுல்தான்பேட்டை பகுதிகளில் ஒவ்வொரு விவசாயிகளின் வீடுகளுக்கு நடந்தே சென்று வாக்குகளை சேகரித்தனர்.

தண்ணீர் இல்லாமல் விவசாயம் குழிதோண்டி புதைக்கப்பட்ட நிலையில், கொஞ்சம் இருக்கும் விவசாய நிலங்களின் வழியாகவும், மின்கோபுரங்களைக் கொண்டு செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதால், சூலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில், தி.மு.க. விவசாய அணி மாநில துணைத்தலைவர் தமிழ்மணி, கோவை தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முத்துமாணிக்கம் உள்ளிட்ட விவசாய அணியினர் விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட விவசாயிகளின் கடன் தள்ளுபடி, ஆனைமலை - நல்லாறு நிறைவேற்றப்படும், நொய்யல் ஆற்றுக் கழிவுகளை அகற்றி, அந்த நீரை கொண்டு குளங்கள் நிரப்பப்படும், விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் பதிக்கப்படுவதைத் தடுத்து புதைவழித்தடமாக மாற்றப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை விவசாயிகளிடத்தில் எடுத்துக் கூறி தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை வெற்றிபெற வைக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கேட்டுக்கொண்டனர்.

பிரச்சாரத்தின்போது, தி.மு.க. விவசாய அணியினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- விவசாயிகளின் தங்க நகைக் கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆனைமலை - நல்லாறு திட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், 4,24,547 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும். 2,100 கிராமங்கள் வறட்சியின் பிடியில் இருந்து மீளும் என்பதை விவசாயிகளிடத்தில் எடுத்து கூறி வாக்குகள் சேகரித்தோம், எனத் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...