நீலகிரியில் நாளுக்குநாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு : தங்கும் விடுதி கட்டணம் பல மடங்கு உயர்வு

நீலகிரி : கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்குள்ள தங்கும் விடுதிகளின் கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

நீலகிரி : கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்குள்ள தங்கும் விடுதிகளின் கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.



நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு மே மாதம் 1-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சமவெளி பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் சுற்றுலாத் தலங்களுக்கு அதிகம் படையெடுப்பது வழக்கம். பொதுவாக, மே மாதத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிக அதிகமாகக் காணப்படும். இந்த நிலையில், கடந்த வாரம் முதலே முன்பதிவு தொடங்கி விட்டது. லாட்ஜ் மற்றும் காட்டேஜ் கட்டணம் பல மடங்கு உயர்ந்த நிலையிலும், லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களில் அறைகள் பதிவு முடிந்து விட்டன.

சாதாரண லாட்ஜ்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை அறைகள் இல்லை என தெரிவிக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க சில காட்டேஜ்களில் தற்போதே யார் அதிக கட்டணம் தருகிறார்களோ அவர்களுக்கே அறை என தெரிவித்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மே 1-ம் தேதி காட்டேஜ்களில் சாதாரணமாக ரூ. 800 வாங்கும் லாட்ஜ்களில் ரூ. 1,500 வரை கொடுத்தால் மட்டுமே அறைகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று, கெஸ்ட் அவுஸ்களில் ரூ. 2,000 வரை இருந்த கட்டணம் ரூ. 3,500 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம், குழு அமைத்து இதைக் கண்காணித்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் பாதிக்காமல் இருப்பார்கள் என்றும், இதனால், சுற்றுலா தொழிலை நம்பியுள்ள சிறு வியாபாரிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...