கோவை : கோவை உள்பட பல்வேறு இடங்களில் பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறையினர் இன்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை : கோவை உள்பட பல்வேறு இடங்களில் பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறையினர் இன்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வரும் வருமான வரித்துறை அதிகாரிகள், கோவையில் மட்டும் 22 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதில், குறிப்பாக கோவை கவுண்டர்மில்ஸ் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய மார்டின் ஹோமியோபதி கல்லூரி, வெள்ளக்கிணறு பகுதியில் அமைந்து இருக்கக் கூடிய அவரது வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருக்கக்கூடிய அவருக்குச் சொந்தமான கட்டிடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை சிவானந்தா காலனி டாடாபாத் பகுதியில் அமைந்திருக்கக் கூடிய மார்ட்டினுக்கு சொந்தமான கட்டிடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். அதில், அந்த கட்டிடத்தின் அமைந்திருக்கக்கூடிய மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரியின் காவலாளி ஒருவரது வீட்டில் 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரமாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வீட்டில் இருந்த காகிதங்கள் மற்றும் பீரோ, மேஜை, கட்டில் என அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டு சோதனையிட்ட அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.