கேரளாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் திட்டம் முறியடிப்பு : பயங்கரவாதி கைது

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதியை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கைது செய்துள்ளது.

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதியை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கைது செய்துள்ளது. 

இலங்கையில் கடந்த 21-ந்தேதி தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் உதவியுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தற்கொலை தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். இலங்கையில் நாசவேலை செய்த பயங்கரவாதிகளுக்கு வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. குறிப்பாக தமிழகம், கேரளாவில் உள்ளவர்களுடன் தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் தொடர்பில் உள்ளனர் என்பதை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கண்டுபிடித்தது.

இதைத் தொடர்ந்து, இலங்கையில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்களுக்கு, தமிழகம், கேரளாவில் உள்ள யாரேனும் உதவி செய்தார்களா? என்ற விசாரணை நடந்தது. இதையடுத்து இந்தியா முழுவதும் உஷார்படுத்தப்பட்டது. தென் மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இலங்கையில் தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஜக்ரான் ஹசீமின், பயங்கரவாதத்தைத் தூண்டும் பேச்சுக்களை கோவையிலும், கேரளாவிலும் பலர் இணையதளம் மற்றும் பெண் டிரைவ் மூலம் பார்த்து இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக, கேரளாவில் பாலக்காட்டைச் சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் என்பவனும், காசர்கோட்டைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக், அகமது அராபத் ஆகியோரும் ஜக்ரான் ஹசீம் பேச்சை கேட்டு பயங்கரவாதிகளாக மாறி இருப்பது தேசிய புலனாய்வு அமைப்பின் தொடர் கண்காணிப்பு மூலம் தெரியவந்தது.

ரியாஸ் அபுபக்கர், அபுபக்கர் சித்திக், அகமது அராபாத் ஆகிய மூவரும் ஜக்ரான் ஹசீமுக்கு உதவிகள் செய்து இருப்பார்கள் என்ற சந்தேகம் தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு வலுத்தது. இதனால் பாலக்காடு, காசர் கோட்டில் உள்ள அவர்களது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பிறகு மூன்று பேரும் கொச்சியில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரிக்கப்பட்டனர். அப்போது, பாலக்காடு ரியாஸ், ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் மிக, மிக நெருங்கிய தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிரியாவில் உள்ள முக்கிய ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் ஆன்லைன் மூலம் தினமும் பேசி வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவனை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். 

29 வயதான ரியாஸ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதி ஜக்ரான் ஹசீம் பேச்சுக்களை கேட்டு வந்ததாகவும், அந்த பேச்சின் அடிப்படையில் கேரளாவில் மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேரளாவில் உள்ள முக்கிய நகரில் அவன் தற்கொலை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருந்ததை ஒப்புக் கொண்டான்.

அவனிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில் கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருக்கும் மேலும் சிலர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த தகவல்களின் அடிப்படையில் அதிரடி சோதனை நடத்தி, அந்த பயங்கரவாதிகளையும் வேட்டையாட தேசிய புலனாய்வு அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...