திருப்பூர் : திருப்பூரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், விரக்தியடைந்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் இடுவம்பாளையம் பெருமாள்கோவில் பகுதியில் வசித்து வருகின்றார். இவரது மகன் சிவசுப்பிரமணியன், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. சிவசுப்பிரமணியன் தனது மதிப்பெண்ணை பள்ளியில் வந்து பார்க்கும் போது, 247 மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளது தெரியவந்தது.
குறைந்த மதிப்பெண் பெற்றதால் நேற்று காலை முதலே மனச்சோர்வுடன் இருந்து வந்த மாணவன் சிவசுப்பிரமணியன், நள்ளிரவு யாருக்கும் தெரியாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பின் சம்பவ அறிந்து வந்த காவல் துறையினர் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.