‘பிளாஸ்டிக் இல்லா’ வால்பாறை மலைப்பகுதி : தொடர்ந்து 46-வது வாரமாக தூய்மைப்பணியில் தன்னார்வலர்கள்

கோவை : ஆழியாறு - வால்பாறை பகுதியை ‘பிளாஸ்டிக் இல்லா’ உருவாக்கும் நோக்கில், தன்னார்வலர்கள் தொடர்ந்து 46-வது வாரமாக தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

கோவை : ஆழியாறு - வால்பாறை பகுதியை ‘பிளாஸ்டிக் இல்லா’ உருவாக்கும் நோக்கில், தன்னார்வலர்கள் தொடர்ந்து 46-வது வாரமாக தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.



ஆழியாறு - வால்பாறை இடையிலான மலைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, வனவிலங்குகளுக்கு தூய்மையான வாழ்விடத்தை அமைத்து தரும் நோக்கில் ‘டார்கெட் ஜீரோ பிளாஸ்டிக்’ என்ற குழு வாரத்தின் இறுதி நாளில் மட்டும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பணியானது, தற்போது 46-வது வாரமாக நடைபெற்றது.



ஆழியாறில் இருந்து வால்பாறை மலைப்பகுதியின் 2-வது கொண்டை ஊசி வளைவு வரை, வனத்துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த தூய்மை பணியில் 10 பைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. செங்குத்தான சரிவுகளில் தன்னார்வலர்கள் கயிறு கட்டி இறங்கி தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இந்தப் பகுதியில் அதிகளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால், அடுத்த வாரமும் இதேப் பகுதியில் தூய்மை பணியை தொடர தன்னார்வலர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தத் தூய்மைப் பணியில் இணைய விருப்பம் உள்ளவர்கள் 97154-05653 என்ற எண்ணை தொடர்பு கொள்ளாலாம்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...