திருப்பூரில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வெவ்வேறு வழக்குகள் : குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

திருப்பூர் : திருப்பூரில் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வெவ்வேறு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் சிறைத்தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வெவ்வேறு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் சிறைத்தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம் கல்லாங்காடு ஆதவன் நகரைச் சேர்ந்த சுப்ரமணி,கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை செல்போனில் படம் பார்க்கலாம் என ஆசைவார்த்தைக் கூறி அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியின் பெற்றோர் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை விசாரித்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 



இதேபோல், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த முருகசாமி என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு 9 வயது சிறுமி பள்ளிக்கு சென்று வீடுதிரும்பும் வழியில் சிறுமியை மிரட்டி வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு ஆயுள்தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.

பெருந்தொழுவை சேர்ந்தவர் பி. கார்த்திக் என்பவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 சிறை ஆண்டு சிறைதண்டனையும் மற்றும் ரூ. 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடந்த இந்த 3 பாலியல் புகாரினையும் விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பு வழங்கினார். பின்னர் குற்றவாளிகள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...