கோவை : ராமநாதபுரம் அருகே திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் மறுப்பு தெரிவித்ததால், காதலியின் வீட்டு முன்பு வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : ராமநாதபுரம் அருகே திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் மறுப்பு தெரிவித்ததால், காதலியின் வீட்டு முன்பு வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள நாராயணசாமி வீதியை சேர்ந்தவர் இம்மானுவேல் ராஜ் (26). இவர் கோவையிலுள்ள தனியார் தண்ணீர் விநியோக நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் புலியகுளம் பெரியார் நகரிலுள்ள ஒரு வீட்டு முன்பு, நின்று கொண்டு உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதைக் கண்ட அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் இளைஞர் தற்கொலை முயற்சியில் முயன்றதை அறிந்து தீயை விரைவாக அணைத்தனர். பின்னர், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இளைஞர் இம்மானுவேல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த இளைஞர் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க பெண்ணின் வீட்டார் மறுப்பு தெரிவித்ததால், பெண்ணின் வீட்டு முன்பு தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.