கோவை : புதுப்பிக்கப்பட்ட மலைரயில் என்ஜின் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அதனை ராட்சத கிரேன் உதவியுடன் இருப்பு பாதையில் இறக்கி வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலைரயில் தினசரி காலை 7.10 மணிக்கு சுற்றுலா தலமான உதகை வரை இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட நீராவி மூலம் இயங்கும் இம்மலை ரயிலில் பயணித்தபடி, நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகை தருகின்றனர்.

கோடை காலத்தில் நீலகிரிக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகக் கூடுதல் சிறப்பு மலைரயில் காலை 9 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. மலைரயிலுக்கு என மொத்தம் 8 என்ஜின்கள் உள்ள நிலையில், இதில் நிலக்கரி மூலம் இயங்கும் இரண்டு பழைய என்ஜின்கள் பழுதாகி நிற்கின்றன. மீதமுள்ள என்ஜின்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு என்ஜினாக பழுது நீக்க பணிக்காக திருச்சியில் உள்ள ரயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உதகை மலை ரயில் என்ஜின் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்சி பணிமனைக்கு பழுது நீக்கப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த நீராவி என்ஜின், சுமார் 5 டன் எடை கொண்டது. இதில், 4,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேன்க் மற்றும் 1,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பர்னஸ் ஆயில் டேன்க் உள்ளது.
பழுது நீக்கப்பணிக்காக கொண்டு செல்லப்பட்ட இந்த என்ஜின் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்ட நிலையில், திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக பெரிய ட்ரக்கர் லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, லாரியில் இருந்து மலைரயில் என்ஜின் ராட்சத கிரேன் உதவியுடன் தூக்கி இறக்கி வைக்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் என்ஜினை இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். விரைவில் இந்த என்ஜின் வழக்கமான பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.