கோவை : மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வில் 554 மதிப்பெண்கள் பெற்றும், குடும்ப சூழல் காரணமாக மேற்படிப்பைத் தொடர முடியாமல் தவித்து வருகிறார் மாணவி அனிதா.

பொதுத் தேர்வு தொடங்க இரு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மாணவி அனிதாவின் தந்தை காலமானார். தாங்க முடியாத இழப்பாக இருந்த போதிலும், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தந்த நம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் 554 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். அவரது திறமையைப் பாராட்டிய பள்ளி தலைமை ஆசிரியர் ஜி. இந்திரா, உயர்கல்வி படிக்க உதவும் பொருட்டும், ஊக்குவிக்கும் வகையிலும் ரூ. 5,000 வழங்கினார்.
மேலும், ஏழ்மை நிலையில் இருக்கும் இந்த மாணவி மேற்படிப்பு படிப்பதற்காக உதவி வேண்டியுள்ளார். இவருக்கு உதவிட எண்ணமுடைய நல்லுள்ளங்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைத் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு, உதவி தலைமை ஆசிரியர் ஆனந்தகுமார் 9600727100, ஆசிரியர் பரத் 9600888789.