வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி : முதற்கட்டமாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை

கோவை : வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபரை பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கோவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபரை பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கோவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடிகள் செய்யும் கும்பல்கள் அதிகரித்து வருகிறது. இவர்கள், குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். மேலும், இந்த கும்பல்கள் கோவை மாவட்டத்தை தலைமையிடமாக வைத்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்து வந்தனர். 

இந்த நிலையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (22) என்ற இளைஞர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் முதற்கட்டமாக மோசடி நிறுவன நிர்வாகியான சரவணம்பட்டியைச் சேர்ந்த தேவ் ஆனந்தம் (43) என்பவரை கைது செய்துள்ளனர். மேலும், மோசடி புகாரில் உள்ள பல்வேறு நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் கிரிஸ்லின் எடியு-கன்சல்டன்சி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர்களான ரசூல் பீட்டர் அவரது மகள் இவாஞ்சலின் ஆகியோர் ஆங்கிலம் கற்பிக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு மூலம், வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை மூளைச் சலவை செய்தனர். மேலும், இவர்களுடன் தேவ் ஆனந்த் என்பவரும் இணைந்து கனடாவில் வேலை வாங்கித் தருவதாகவும், லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் பெற்றுத் தருவதாகவும் இளைஞர்களிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...