சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க கோடை சீசனில் தினமும் 3 முறை உதகை மலை ரயில் இயக்கம்

நீலகிரி : கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், உதகையில் இருந்து கேத்தி வரை இயக்கப்படும் உதகை மலை ரயில், இன்று முதல் தினமும் 3 முறை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

நீலகிரி : கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், உதகையில் இருந்து கேத்தி வரை இயக்கப்படும் உதகை மலை ரயில், இன்று முதல் தினமும் 3 முறை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. 

உதகையில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா மையங்களுக்குச் சென்று பார்வையிடுவது ஒருபுறம் என்றால், மலை ரயிலில் பயணிப்பது என்பது அவர்களின் பயணத் திட்டத்தில் முக்கியமான ஒன்றாக இடம்பெறுகிறது. இதற்காக ரயில்வே துறை பல்வேறு மேம்பாடுகளை செய்து வருகின்றது. 

அந்த வகையில், இதுவரை வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உதகை முதல் கேத்தி இடையே இயக்கப்பட்டு வந்த சுற்றுலா சிறப்பு ரயில் இன்று முதல் தினந்தோறும் மூன்று முறை இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, உதகை - கேத்தி வரை காலை 9.40 மணிக்கும், 11.30 மணிக்கும், பிற்பகல் 3.00 மணிக்கும் என மூன்று முறை இயக்கப்படுகிறது கட்டணம் முதல் வகுப்பு ரூ. 400, இரண்டாம் வகுப்பு ரூ. 300 ஆகும். பயணிகள் அனைவருக்கும் தேயிலை தூள், நீலகிரி தைலம் போன்றவை கூடுதலாக வழங்கப்படுகிறது. இதன்மூலம், மலை ரயிலில் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் செல்லும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...