நீலகிரி : பில்லூர் மட்டம் - யானைப்பள்ளம் இடையே கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலை பணிகளை மீண்டும் உடனடியாக தொடங்க வேண்டும் என்று அப்பகுதி ஆதிவாசி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பில்லூர் மட்டம் - யானைப்பள்ளம் இடையே தார்ச்சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. குன்னூரில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யானைப்பள்ளம் ஆதிவாசி குடியிருப்பு உள்ளது. இந்தப் பகுதியை சுற்றி சடையன் கொம்பை, சின்னாளகொம்பை ஆகிய ஆதிவாசி இன கிராமங்கள் உள்ளன. இந்த ஆதிவாசி இன கிராமங்கள் உலிக்கல் பேரூராட்சியின் 14-வது வார்டிற்குட்பட்டது ஆகும். இந்த கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்களுக்காக 6 கிலோ மீட்டர் நடைபயணமாக பில்லூர் மட்டம் வரவேண்டியது உள்ளது.
ஆனால், இந்த ஆதிவாசி கிராமங்களுக்கு செல்லும் மண்சாலை கரடு, முரடாக இருப்பதால் பெரும்பாலான வாகனங்கள் செல்வதில்லை. இதனால், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் சிரமம் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறி வந்தனர்.
இந்த நிலையில், உலிக்கல் பேரூராட்சி சார்பில் பில்லூர் மட்டத்திலிருந்து யானைப்பள்ளத்திற்கு தார்ச்சாலை அமைக்க முதல் கட்டமாக 1.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ. 1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, ஆரம்பகட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதன்பிறகு பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால், ஆதிவாசி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, யானைப்பள்ளம், சடையன்கொம்பை, சின்னாளகொம்பை ஆதிவாசி கிராமங்களுக்கு செல்லும் இந்த மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றும் பணியை மீண்டும் தொடங்கி முடிக்க வேண்டும் என்று இவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.