கோவையில் வீட்டுவசதித்துறை குடியிருப்பில் அனுமதியின்றி போடப்பட்ட கேபிள் இணைப்பு துண்டிப்பு : அதிகாரிகளுடன் வாக்குவாதம்

கோவை : உக்கடம் அருகே உள்ள புல்லுகாடு பகுதியில் அனுமதியின்றி போடப்பட்ட கேபிள் இணைப்புகளை வீட்டுவசதித் துறை அதிகாரிகள் துண்டித்ததால், கேபிள் ஆபரேட்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை : உக்கடம் அருகே உள்ள புல்லுகாடு பகுதியில் அனுமதியின்றி போடப்பட்ட கேபிள் இணைப்புகளை வீட்டுவசதித் துறை அதிகாரிகள் துண்டித்ததால், கேபிள் ஆபரேட்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

கோவையைச் சேர்ந்த முகைதீன் அப்துல் காதர் என்பவரின் மகன் சுல்தான். இவர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கோவை கோட்டத்திற்குட்பட்ட உக்கடம் புல்லுகாடு குடிசை மாற்று குடியிருப்பில் கேபிள் டிவி இணைப்பு வழங்க முறையான அனுமதி பெற்றுள்ளார். இதற்காக, குடிசை மாற்று வாரியத்தில் ரூ. 4 லட்சத்திற்கு மேல் பணம் கட்டியுள்ளார். ஆனால், புல்லுகாடு குடியிருப்பு பகுதியில் பாபு, குஞ்சான் என்ற கேபிள் ஆபரேட்டர்கள் அனுமதியின்றி கேபிள் இணைப்பு கொடுத்துள்ளனர்.



இதையடுத்து, சுல்தான் கொடுத்த புகாரின் அடிப்படையில், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் முறைகேடாக அனுமதி இன்றி கேபிள் இணைப்பு போட்டுள்ள இணைப்பை துண்டிக்க காவல்துறையிடம் பாதுகாப்பு கோரி இருந்தனர். இந்த நிலையில், இன்று வீட்டுவசதித் துறை அதிகாரிகள் கேபிள் இணைப்பைத் துண்டித்தனர். இதனால், அனுமதியின்றி கேபிள் இணைப்பைப் போட்டவர்கள், கேபிளை துண்டித்ததால் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் புல்லுகாடு குடியிருப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...