கோவை : பெரிய தடாகம் அருகே செங்கல் சூளையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் உள்பட 2 பேர் காட்டு யானை தாக்கியதில், அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர்தப்பினர்.

கோவை தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூளைகள் பெரும்பாலும் வனப்பகுதிகளை ஒட்டியிருப்பதால், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. எனவே, சூளைகளில் பணியாற்றுபவர்கள் இரவு நேரங்களில், யானைகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, யானைகள் நுழைய முடியாதவாறு கூடாரங்களை அமைத்து தங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு பெரிய தடாகம் பகுதியில் உள்ள மயில் சேம்பர்ஸ் என்ற சூளையில் ஐய்யண்ணன் (52) தனது 6 வயது பேரனான குணாவுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு குட்டியுடன் காட்டு யானை ஒன்று வந்துள்ளது. பின்னர், கூடாரத்திற்குள் குட்டி யானை புகுந்தது. இதனைக் கண்ட அவர்கள், அங்கிருந்து தப்பி கூடாரத்தை விட்டு வெளியேறினார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த தாய் யானை, ஐய்யண்ணனையும், சிறுவன் குணாவையும் தாக்கியது. இதில், படுகாயமடைந்த இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
பின்னர், தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். தொடர்ந்து, படுகாயமடைந்தவர்கள் இருவரையும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, காட்டு யானைகளால் ஏற்படும் பிரச்சனைகளின் போது, தொடர்பு கொள்ள 180042545456 என்ற இலவச அலைபேசி எண்ணை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.