கோவை : கடந்த 2016-ம் ஆண்டு கோவை மாநகராட்சி இரவு தங்கு மையத்தில் ஆதரவற்றவராக சேர்க்கப்பட்ட தெலுங்கானாவைச் சேர்ந்த பார்வையற்ற மூதாட்டி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி மாநகர காவல்துறை ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பார்வையிழந்த சங்கரம்மா (58) என்ற மூதாட்டியை சாலையிலிருந்து மீட்டு, ஆர்.எஸ். புரம் மாநகராட்சி இரவு தங்கும் மையத்தில் ஒப்படைப்பு செய்தனர். சுமார் இரண்டரை ஆண்டுகள் அங்கிருந்த அவர், தனது ஊர் தெலுங்கானா மாநிலம் காமரெட்டி என அடிக்கடி கூறி வந்தார். இதையடுத்து, தெலுங்கானா தலைமை காவல்துறைக்கு இது குறித்து விபரம் தெரிவித்தது. அதனடிப்படையில், தெலுங்கானா மாநிலம் தேவனபல்லி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சங்கரம்மாவின் குடும்பத்தினர் வசித்து வருவதை உறுதி செய்தனர்.

இந்த நிலையில், சங்கரம்மாவின் மகன் ரமேஷை தெலுங்கானா போலீசார், உரிய ஆவணங்களுடன் கோவைக்கு நேரில் அழைத்து வந்தனர். அப்போது, இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட மகனும், தாயும் மகிழ்ச்சியடைந்தனர்.
கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு வேண்டுதல் கடிதம் கொடுத்ததை ஏற்று, கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாநகராட்சி பராமரிப்பில் பாதுகாப்பாக தங்கியிருந்த பார்வையிழந்த சங்கரம்மாவை அவரது மகன் ரமேஷ் வசம் ஒப்படைத்து, தெலுங்கானா ஏ.எஸ்.சி. லட்சிராம் முன்னிலையில், சொந்த ஊருக்கு கூட்டிச் செல்ல அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாநகராட்சி இரவு தங்கும் மையத்தில் 2016-ம் ஆண்டு பராமரிக்க வேண்டி ஒப்படைப்பு செய்த மாநகர ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், கோவை மாநகராட்சி ஆணையர், காப்பகத்தை பராமரித்து வரும் மலரும் விழிகள் தொண்டு நிறுவனம், காப்பாளர் கி. கங்காதரன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.