பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த ஆடியோ விவகாரத்தில் எனக்கு தொடர்பில்லை : பார் நாகராஜ் புகார் மனு

கோவை : மோசடி புகாரை திரும்பப் பெறக் கூறி பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த ஆடியோ விவகாரத்தில் எனக்கு தொடர்பில்லை என்று பார் நாகராஜ் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


கோவை : மோசடி புகாரை திரும்பப் பெறக் கூறி பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த ஆடியோ விவகாரத்தில் எனக்கு தொடர்பில்லை என்று பார் நாகராஜ் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் ஆனைமலையைச் சேர்ந்த விஜய் என்பவர் கோகிலா மற்றும் அவரது கணவர் சம்பத் மீது மோசடி புகாரைக் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், இந்த மோசடி புகாரை திரும்பப் பெறக் கூறி விஜயின் மனைவி ஜூலியன்ராயர் என்பவரை செல்போனில் பொள்ளாச்சியைச் சேர்ந்த பார் நாகராஜ் மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆடியோவிற்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என பார் நாகராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றையும் அவர் அளித்துள்ளார்.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பார் நாகராஜ் கூறியதாவது :- இந்த ஆடியோவில் பேசுவது நான் இல்லை. ஆடியோவில் குறிப்பிடப்படும் விஜய் மற்றும் ஜூலியன்ராயர் மீது தான் கோகிலா பொள்ளாச்சி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நக்கீரன் ஊடகத்தைச் சேர்ந்த செய்தியாளர் தன்னிடம் இது குறித்து பேசிய அடுத்த நாள், இந்த ஆடியோ வெளியாகி உள்ளது. எனவே, அவரையும், அந்தப் பெண்ணையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், என அவர் கூறினார். 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை மிரட்டிய வழக்கில் பார் நாகராஜ் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...