பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் சமர்ப்பித்தது சி.பி.சி.ஐ.டி.

கோவை : பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. இன்று சமர்ப்பித்தது.

கோவை : பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. இன்று சமர்ப்பித்தது. 

பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச விடியோ எடுத்து அவர்களிடம் அத்துமீறி பாலியல் கொடுமையில் ஈடுபட்டதாக பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசியல் தலைவர்களின் வாரிசுகளுக்கும் தொடர்பிருப்பதாக எழுந்த புகாரையடுத்து, கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இருப்பினும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. தொடர்ந்து விசாரித்து வந்தது.

சி.பி.சி.ஐ.டி. தென் மண்டல காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், மேற்படி இந்த வழக்கில் புலன் விசாரணை மேற்கொண்டு, 40 சாட்சியங்களை விசாரித்தார். மேலும், அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, வழக்கின் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் மற்றும் வழக்கு சொத்துக்களும் கைப்பற்றப்பட்டு, தமிழ்நாடு தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

இதனிடையே, புகார் கொடுத்த மாணவியின் சகோதரரைத் தாக்கியதாக "பார்' நாகராஜ், பாபு, செந்தில், வசந்த் ஆகியோர் மீது போலீஸார் அடிதடி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதில், பார் நாகராஜை தவிர மற்றவர்கள் சிறையில் உள்ளனர். மேலும், கைதானவர்கள் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நடத்திய சோதனையில், செல்லிடப்பேசிகள், மடிக் கணினிகள், பென் டிரைவ்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். 

இதைத்தொடர்ந்து, அடிதடி வழக்கில் சரணடைந்த மணிவண்ணன் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாளிகள் மீது பாலியல் பலாத்கார வழக்கும் கூடுதலாக சேர்க்கப்பட்டது.

இந்த சூழலில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 பிரிவுகளின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்த சி.பி.ஐ. கடந்த 27-ம் தேதி முதல் விசாரணையைத் தொடங்கியது. இந்த நிலையில், இந்த பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையில் இருந்து சி.பி.ஐ.யிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...