சூலூர் இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல் : 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை

கோவை : சூலூர் இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நம்பிக்கை தெரிவித்தார்.


கோவை : சூலூர் இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நம்பிக்கை தெரிவித்தார்.



கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கந்தசாமி இன்று ஊர்வலமாக வந்து வேட்புமனுவை தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

வேட்புமனு தாக்கலுக்குப் பின் சூலூர் அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி செய்தியாளர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- முதலமைச்சர், துணை முதலமைச்சர் கொண்டு வந்த அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றுவேன். பொதுமக்களில் ஒருவனாக இருந்து தேவைகளை பூர்த்தி செய்வேன். மேலும், சுல்தான்பேட்டை, சூலூரில் என இரு இடங்களிலும் வீடு இருக்கின்றது. எனவே, இங்கிருந்தே மக்கள் பணி ஆற்றுவேன். அடித்தட்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தேவையானதை செய்வேன். சூலூர் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம், எனக் கூறினார்.



இதனைத் தொடர்ந்து, சீட் வழங்கப்படாததால் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகின்றதே என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி, "அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஒன்றிணைந்து செயல்படுவோம். 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்," என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...