திருப்பூர் : தேர்தலின் போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் மீது பொய்யாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்து மனுவில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டம் 33-வது வார்டு பகுதிக்குட்பட்டது மண்ணரை பாரப்பாளையம் பகுதி. இந்தப் பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடந்த சமயத்தில், அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த கிளை நிர்வாகியான கருப்பசாமி என்பவர் தேர்தல் நடந்த அன்று வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக ஆதாரத்துடன், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை.
மாறாக, அ.தி.மு.க. நிர்வாகி கருப்பசாமி என்பவர் பொய்யாக அரசு மருத்துவமனையில் சேர்ந்துவிட்டு, எதிர்கட்சியினர் தன்னை தாக்கியதாகக் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 5 பேர் மீது திருப்பூர் வடக்கு காவல்துறையினர் எந்த விசாரணை மேற்கொள்ளாமல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை உடனடியாக ரத்து செய்து, கருப்பசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.