ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பாலியல் நிகர்நிலை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் : அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

கோவை : ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் காவல்துறையினருக்கு பாலியல் நிகர்நிலை சட்டங்கள் குறித்து வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை : ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் காவல்துறையினருக்கு பாலியல் நிகர்நிலை சட்டங்கள் குறித்து வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது :- பன்னிமடை பிரதீப் - வனிதா ஆகிய தம்பதியினரின் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கி உள்ள ரூ. 3 லட்சம் போதுமானதாக இல்லை. அதனை உயர்த்தி தர வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிட வேண்டும். 



மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக அதிகமாக பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி, அதனை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துடன் இணைக்கப்பட வேண்டும். பாலியல் சம்பவங்கள் தனிநபர் கழிப்பிடங்கள் இல்லாத பகுதிகளில், இயற்கை உபாதைக்கு செல்லும் இடங்களில்தான் நடைபெறுவதால், பிரதமரின் தனிநபர் கழிப்பிட திட்டத்தின் கீழ் அனைவருக்கும் கழிப்பறை அமைத்துத் தர வேண்டும், இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் வாசுகி பேசியதாவது :- குற்ற சம்பங்களைக் குறைக்க பாலியல் நிகர்நிலை சட்டங்கள் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதற்கு மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல்துறையினர், பொதுநல அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தப்படும் பட்சத்தில், குற்ற சம்பவங்களைக் குறைக்க முடியும். 

பொள்ளாச்சி விவகாரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்தான் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என வேண்டுகோள் வைத்தது. தற்போது சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதை வரவேற்கிறோம். பொள்ளாச்சி விவகாரத்தில் தங்களிடம் உள்ள ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். பொள்ளாச்சி விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால், கோரிக்கைகள் முன் வைத்து மாவட்ட செயலாளர் ராதிகா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது, என தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...