கோவை : கோவையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய 15 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவையில் பனியன் கம்பெனியில் உதவியாளர், பீஸ் கட்டிங், கழிவு பஞ்சை பிரித்தெடுத்தல் போன்ற பணிகளில் சட்டவிரோதமாகக் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களை அதிகாரிகள் மீட்டு, குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்த்தனர். அவர்களின் 6 மாணவிகள் உள்பட 17 பேர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருந்தனர்.
இந்த நிலையில், இன்று வெளியாகிய 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் 15 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அதிகபட்சமாக நம்பியூரைச் சேர்ந்த எஸ். அபிநயா 387 மதிப்பெண்களும், திருப்பூரைச் சேர்ந்த இ. கிருபாவதி 381 மதிப்பெண்களும், வி. ரூபா 380 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர்.