அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிப்பே முதலிடம் பிடிப்பதற்கான காரணம் : திருப்பூர் ஆட்சியர் பெருமிதம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் உயர்ந்து இருப்பதே, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்திருப்பதற்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் உயர்ந்து இருப்பதே, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்திருப்பதற்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். 



இன்றைய தினம் வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 98.53 சதவிகிதம் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் திருப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 98.53 சதவிகிதம் தேர்ச்சியோடு முதலிடம் பிடித்துள்ளோம். மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்கள் 29,153. அதில் தேர்ச்சியடைந்தவர்கள் 28,723 பேர். 12-ம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம்போல், 10-ம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதத்திலும் முதலிடம் பெற்றிருக்கிறோம். இதற்கு காரணமான ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒரே ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆதிதிராவிடர் பள்ளியில் 100 சதவிகித தேர்ச்சி, அரசு பள்ளியில் 97.54 தேர்ச்சி என இதெல்லாம்தான் முதலிடத்திற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை சிறப்பான முறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி, அவர்களை சிறப்பான முறையில் தேர்ச்சியடைய செய்துள்ளது, எனக் கூறினார். 

இதனையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்கள் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...