கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீ குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை சேரன் மாநகர் என்.ஜி.பி. கல்லூரி பின்புறம் உள்ள பாலாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். சோப்பு, பினாயல் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவர் தனது மனைவி சாந்தி (37) மகள்கள் சிவகாமி சுந்தரி (11), தரணியா(9) ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வதிருந்தனர். அப்போது, திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் அவர்களை அழைத்து சென்று அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி மாற்று துணிகள் கொடுத்து அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.



தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட செல்வராஜ் கூறுகையில், “தான் வசித்து வரும் வீட்டின் அருகில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் வீடு கட்டி அங்கு வசித்து வருகிறார். அவரது வீட்டின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த செடிகளை, நான் வளர்த்து வந்த ஆடுகள் மேய்ந்ததால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. மேலும், தான் ஒரு போலீசார் எனக் கூறி மிரட்டினர். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பத்துடன் தீ குளிக்க முயன்றோம்,” என்றார்.

மேலும், இது குறித்து புகார் அளித்துள்ளீர்களா..? என்று கேட்டதற்கு காவலர் என அவர் சொல்லியதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...