தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.2 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகளும், ஆயிரம் தனித் தேர்வர்களும் எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. 95.2 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் மாணவர்கள் 93.30 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். மாவட்ட அளவில் அதிகபட்சமாக திருப்பூர் 98.53 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து, ராமநாதபுரம் 98.48 சதவீதமும், நாமக்கல் 98.45 சதவீதமும் பெற்றுள்ளன. 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 6,100 ஆகும்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.48 சதவீதமும், தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 99.05 சதவீதமாகும். இது கடந்த ஆண்டை விட கூடுதலானதாகும்.
தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கெனவே வழங்கிய கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
இருப்பினும் இணையதளங்கள் மூலமாகவும் மாணவ, மாணவிகள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம்.