தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகளும், ஆயிரம் தனித் தேர்வர்களும் எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கெனவே வழங்கிய கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
இருப்பினும் இணையதளங்கள் மூலமாகவும் மாணவ, மாணவிகள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மாவட்ட வாரியாக ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தகவல் மையங்களிலும், அனைத்து நூலகங்களிலும், மாணவர்கள் படித்த அந்தந்த பள்ளிகளிலும் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.