கோவை : மிருக பலம் உள்ள மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் சக்தி தி.மு.க.வால் முடியும் என வடநாடு ஒப்புக்கொண்டுள்ளதாக கோவையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.

கோவை சூலூர் பகுதியில் தி.மு.க. செயல்வீரர்கள் அறிமுக கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியதாவது :- நாம் நீட் தேர்வை ரத்து செய்வோம் என சொல்கிறோம். ஆளும் கட்சியும் அதையே சொல்கிறது. இது மானம்கெட்ட அரசாங்கம். தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நிறைவேற்றிய தீர்மானம் எங்கே இருக்கிறது என தேட முடியாத கேடுகெட்ட அரசாங்கம். பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்பி வைக்கும் கட்சி தி.மு.க. என வட நாட்டினர் தமிழகத்தை பாராட்டி பேசுகின்றனர். சூலூரில் கோட்டைவிட்டு விட கூடாது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம், என்றார்.