முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமியை விட அ.தி.மு.க. வேட்பாளர் எந்த அளவிற்கு சிறந்தவர்..? : கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி

கோவை : முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமியை விட அ.தி.மு.க. வேட்பாளர் எந்த அளவிற்கு சிறந்தவர்..? என்று அ.தி.மு.க.விற்கு கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

கோவை : முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமியை விட அ.தி.மு.க. வேட்பாளர் எந்த அளவிற்கு சிறந்தவர்..? என்று அ.தி.மு.க.விற்கு கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

கோவை சூலூர் பகுதியில் தி.மு.க. செயல்வீரர்கள் அறிமுக கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈஸ்வரன் பேசியதாவது :- கூட்டத்திற்கு வந்திருக்கின்ற ஒவ்வொருவரும் 10 ஒட்டுகளை பெற்றாலே, சூலூர் தொகுதியில் பெரிய அளவில் வெற்றி பெற முடியும். அ.தி.மு.க.வை வெற்றி பெற வைத்து கடந்த 8 ஆண்டுகளில் என்ன பலனை சூலூர் தொகுதி மக்கள் கண்டீர்கள்..?. விசைத்தறி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதா..?. தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தென்னை வாரியம் முடக்கப்பட்டதால், தென்னை விவசாயிகளுக்கு பலன்இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.விற்கு ஓட்டு போட்டு சூலூர் மக்கள் கடந்த காலங்களில் ஏமாந்து போனீர்கள். 

நொய்யல் - உப்பாறு இணைப்பு திட்டம் என்னவென்று அ.தி.மு.க.வினருக்கு ஒருவருக்குக் கூட தெரியாது. ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் ஏன் நிறைவேற்றப்படவில்லை..?.

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு என்ன வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தது. அ.தி.மு.க.வினர் 10 பேர் மீது இருக்கும் வழக்குகளை காப்பாற்றிக் கொள்ளவே பா.ஜ.க வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. சாமளாபுரத்தில் நடந்த சம்பவத்திற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை தண்டிக்க மக்கள் காத்திருந்தனர். ஆனால், அவர் இறந்து விட்டார். அ.தி.மு.க.வில் உள்ள செ.ம. வேலுச்சாமி சூலூர் மண்ணின் மைந்தர். அவரை விட தற்போது அ.தி.மு.க.வில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் எந்த அளவிற்கு சிறந்தவர்..?. செ.ம.வேலுச்சாமியை ஏன் சூலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கவில்லை..?. செ.ம. வேலுச்சாமியை சூலூர் வேட்பாளராக அறிவித்து இருந்தால், களம் சுறுசுறுப்பாக இருந்திருக்கும். அப்படிபட்ட ஆளை விட்டு விட்டு கந்தசாமியை அ.தி.மு.க. வேட்பாளராக அறிவித்து பலிகடா ஆக்கியுள்ளனர். இப்போது சீட் வாங்க முடியாவிட்டால் இனி செ.ம.வேலுச்சாமி எப்பாவது சீட்டு வாங்க முடியுமா..?. ஏன் செ.ம.வேலுச்சாமிக்கு சீட் வழங்க வில்லை என்பதை அமைச்சர் வேலுமணிதான் விளக்க வேண்டும்.

எப்பவாவது துரைமுருகன் செ.ம. வேலுச்சாமியுடன் போட்டோ எடுத்து இருக்கீங்களா..? அதனால்தான் அவருக்கு சீட் கொடுக்காமல் விட்டுட்டாங்களா..?. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். எனவே, யாரும் நகைகளை அவசரப்பட்டு திருப்பிவிட வேண்டாம், என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...