பொங்கலூர் பழனிச்சாமியை வெற்றி பெற வைக்க முருகனையும், வேலுவையும் ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார் : சூலூர் தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு பேச்சு

கோவை : பொங்கலூர் பழனிச்சாமியை வெற்றி பெற வைக்க முருகனையும், வேலுவையும் ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார் சூலூர் தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு தெரிவித்தார்.


கோவை : பொங்கலூர் பழனிச்சாமியை வெற்றி பெற வைக்க முருகனையும், வேலுவையும் ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார், என சூலூர் தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு தெரிவித்தார்.

கோவை சூலூர் பகுதியில் தி.மு.க. செயல்வீரர்கள் அறிமுக கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க. பொருளாளர் துரை முருகன், சூலூர் தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் சூலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எ.வ.வேலு பேசியதாவது :- தமிழக சட்டமன்றத்தில் கலைஞருக்கு அடுத்தபடியாக, நின்ற தேரதல்களில் அனைத்தும் வென்றவர் துரைமுருகன். அதனால், அவர் இங்கு நமக்கு ஆலோசனை சொல்ல வந்துள்ளார். பழனிச்சாமியை வெற்றி பெற வைக்க முருகனையும், வேலுவையும் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

செ.ம.வேலுச்சாமியை விட்டு விட்டு வேலுமணி இங்கு தான்தான் எல்லாம் என்ற மனப்பான்மையில் வேட்பாளரை அறிவித்து இருக்கின்றார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நாங்க பார்த்து இருக்கின்றோம். துரைமுருகன் அவர்களை சட்டமன்றத்தில் பார்த்தால் எஸ்.பி.வேலுமணி அப்படி ஒரு நெளி நெளிவார். எஸ்.பி.வேலுமணி சட்டமன்றத்திற்கு நுழையும்போது மீசையுடன் இருந்தார். ஜோசியர் சொன்னதால் மீசையை எடுத்து விட்டு, தலையை செம்பட்டையாக்கிவிட்டார். கையில் வேறு மஞ்சளை பூசிக்கொண்டு திரிகின்றார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒரு டுபாக்கூர் பார்ட்டி. வேலுமணி கோடி கோடியாக கொள்ளையடித்து இருக்கின்றார் என அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்து இருக்கின்றது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தும் நடவடிக்கைகளை அவர் செய்கின்றார். வேலுமணி அவர்களே, நீங்கள் உங்கள் கட்சியில் உள்ள செ.ம.வேலுச்சாமியை ஏமாற்றலாம். மற்றவர்களை ஏமாற்ற முடியாது, என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...